search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜியோ நிறுவனம்"

    • முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது.
    • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்பட உள்ளது.

    சென்னை:

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொள்ளவில்லை. வீடியோ மூலம் அவர் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு அறிவுசார், பாரம்பரியத்தில் சிறந்து விளங்கும் மாநிலம். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக உள்ளது.

    ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆலை அடுத்த வாரம் தொடங்கப் பட உள்ளது.

    தமிழகத்தில் ஜியோவின் 300 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ஜியோ வாடிக்கையாளர்களாக 3.5 கோடி பேர் உள்ளார்கள். இதில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம்.

    தமிழகத்தில் ஜியோ நிறுவனம் 5 ஜி சேவையை கடந்த மாதமே முழுமையாக வழங்க தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டிஜிட்டல் துறையில் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
    • ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புதிய தளமாகும்.

    சென்னை:

    இணைய தொழில்நுட்பத்தில் அபார வளர்ச்சியை அடைந்து வரும் இந்தியாவில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

    அந்தவகையில் சென்னையில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியது.

    சென்னையை தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கும் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடந்தது.

    தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு மதுரை உள்ளிட்ட 6 நகரங்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவையை தொடங்கிவைத்தார்.

    விழாவில் அவர் பேசும்போது, 'டிஜிட்டல் துறையில் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மேம்படும். கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பாடு அடைய ஜியோ நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது' என்றார்.

    விழாவில் ஜியோ நிறுவனத்தின் தமிழக நிர்வாக தலைவர் ஹேமந்த்குருசாமி பேசியதாவது:-

    இந்த ஆண்டு (2023) இறுதிக்குள் கிராமம், நகரம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளோம். மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, 'ஸ்டேண்ட் அலோன்' நெட்வொர்க்குக்கு பதிலாக 'நான் ஸ்டேண்ட் அலோன்' நெட்வொர்க்கை பயன்படுத்தின.

    ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புதிய தளமாகும். இதன் காரணமாக 5ஜி சேவை மிக வேகமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். இந்த நெட்வொர்க்கை தயாரிக்க 4ஜி இயங்குதளம் பயன்படுத்தப்படவில்லை. இது அதிவேக இணையத்தை வழங்குவதோடு போன் அழைப்புகளின் தரமும் சிறப்பாக இருக்கும். இதன்மூலம் ஜியோவின் 5ஜி சேவை மட்டுமே உண்மையான 5ஜி சேவையாக இருக்கும்.

    தமிழகத்தில் 5ஜி சேவைக்காக ஜியோ நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார்.
    • 5ஜி மூலம் இயங்கும் வைபை சேவைகளை நாத்வாராவில் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் அறிமுகம் செய்துள்ளது. அப்போது ஆகாஷ் அம்பானி பேசியதாவது:

    இந்தியாவின் உண்மையான 5ஜி வசதிகொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வைபை வசதியை புனித நகரமான நாத்துவாராவில் அறிமுகம் செய்து பொதுமக்களுக்கும் கடவுளுக்கும் சமர்ப்பிக்கிறோம்.

    இதைத்தொடர்ந்து இன்னும் பல இடங்களுக்கு இந்த 5ஜி சோதனை செய்யவுள்ளோம். அதில் புதிதாக சென்னையும் சேர்ந்துள்ளது.

    5ஜி சேவை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு வீடு மற்றும் ஒவ்வொரு வணிக அமைப்புக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    5ஜியில் இயங்கும் வைபை சேவையை மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    அக்டோபர் 1 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JioInstitute #HRDMinistry
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் தலைசிறந்த 6 நிறுவனங்களை (Institute of Eminence) தேர்வு செய்தது. இந்த நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

    பட்டியலில் உள்ள 6 நிறுவனங்களில் ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகிய மூன்றும் அரசு நிறுவனங்கள் ஆகும். 
    மீதமுள்ள மூன்றில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

    ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னும் பேப்பர் அளவில் கூட தொடங்கப்படாத ஒரு நிறுவனமாகும். கூகுளில் தேடிப்பார்த்தால் கூட இந்த பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. பின்னர், எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ இடம்பிடித்தது என பலர் கேள்வி எழுப்பினர்.



    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சித்திருந்தன. இந்த பட்டியல் வெளியிட்ட பின்னர் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ‘நாட்டில் 800 பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், உலகின் தலைசிறந்த 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் நாம் வரவில்லை. தற்போது, கல்வி நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 6 நிறுவனங்கள் அந்த இலக்கை எட்டும்’ என பதிவிட்டிருந்தார்.

    இன்னும், அடிக்கல் கூட நாட்டப்படாத ஒரு நிறுவனம் எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெறும் என பலர் கேள்வி எழுப்பி விமர்சித்த நிலையில், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் மறுப்பு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் ஆகிய மூன்று விதிகளின் கீழ் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
    ×